கர்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்!

Wait 5 sec.

கர்நாடகத்தின் சிக்கபல்லாபூராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூரா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவானதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள சோமசெட்டிஹள்ளி கிராமத்திற்கு அருகில் இருந்தது. மேலும் இந்த நிலநடுக்கமானது அதிகாலை 3.29 மணிக்கு, 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள தாரிடாலு கிராம பஞ்சாயத்திற்கு தென்மேற்கே 2.53 கி.மீ தொலைவிலும், அலிபுரா கிராம பஞ்சாயத்திற்கு வடமேற்கே 4.30 கி.மீ தொலைவிலும், சிக்கபல்லாபூர் நகரத்திற்கு வடமேற்கே 33 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது."நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து கணக்கிடப்பட்ட நில அதிர்வு தீவிர வரைபடத்தின்படி, இதன் தீவிரம் குறைவாகவே உள்ளது. மையப்புள்ளியிலிருந்து 20 முதல் 30 கி.மீ சுற்றளவு வரை அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருப்பதால், உள்ளூர் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இருப்பினும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு மற்றும் தீவிரம் குறைவாகவே இருப்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். An earthquake of 2.9 magnitude was recorded in Chikkaballapura district in the wee hours of Saturday, the KSNDMC said.கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா? செல்லூர் ராஜூ கேள்வி