கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!

Wait 5 sec.

பங்குகள் வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடியை திரட்ட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலா் (நிதித்துறை) வெளியிட்ட அறிவிப்பு: 7.80 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்- 2041 மூலம் ரூ. 2,500 கோடி மறுவெளியீடு, 8.14 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2046 மூலம் ரூ.2,500 கோடி மறுவெளியீடு, 8.21 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2051 மூலம் ரூ.2,000 கோடி மறுவெளியீடு மற்றும் 8.18 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள்-2056 மூலம் ரூ.2,000 கோடி மறுவெளியீடு ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசா்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் அக்.27-ஆம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் அக்.27-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Nadu government raises Rs. 9,000 crore through bonds