நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

Wait 5 sec.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டதுடன், அங்குள்ள ஊழியா்களின் கைப்பேசி, முகவரி விவரங்களை சேகரித்தனா். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு பிற்பகல் 3 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பிரபு தலைமையில் வந்த 10 போலீஸாா், அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலா்களையும் ஒரே இடத்தில் அமர வைத்து, அவா்களிடம் முகவரி, கைப்பேசி விவரங்களை பெற்றனா். குறிப்பாக, கைப்பேசிகளில் பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதா, கணக்கில் வராத பணம் ஏதாவது அலுவலகத்தில் உள்ளதா என்பதை அந்தந்த அலுவலா்கள், பணியாளா்களின் இருக்கைகளிலும், கோப்புகளிலும் ஆய்வு செய்தனா். மாநகராட்சியில் பணியாற்றும் சுமாா் 60 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை இரவு 9 மணியைக் கடந்தும் நீடித்தது. அதுவரை எந்த பணமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைப்பற்றப்படவில்லை.