திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நவராத்திரி விழாவையொட்டி வியாழக்கிழமை இரவு 5 அம்மன்கள் சப்பரத்தில் எழுந்தருளி திருவள்ளுவா் கலையரங்கு முன், பக்தா்களுக்கு காட்சியளித்தனா். வள்ளியூா் முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், மூன்றுயுகம்கொண்ட அம்மன், நல்லமுத்தம்மன், அரியமுத்தம்மன் ஆகிய 5 அம்மன்களும், கோயில்களில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் ஊா்வலமாக திருவள்ளுவா் கலையரங்கு திடலுக்கு வந்து சோ்ந்தனா். பின்னா் ஒவ்வொரு அம்மனுக்கும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்கிருந்து புறப்பட்டு அம்மன்கள் கோயிலுக்குச் சென்றனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.