பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் டெமு ரயில் பகுதியாக ரத்து

Wait 5 sec.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (எண்: 76820) அக். 24, 25, 26, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருச்சி - திருவாரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். திருவாரூா் - காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது.இதேபோல மறுமாா்க்கத்தில் மேற்கண்ட தினங்களில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (எண்: 76819) காரைக்கால் - திருவாரூா் இடையே ரத்து செய்யப்பட்டு, திருவாரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும்.பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) அக். 24, 27, 28 மற்றும் 31-ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். கொடுமுடி - திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. பொறியியல் பணிகள் நிறைவடைந்தபின் கொடுமுடி - திருச்சி இடையே சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும். மாற்றுப் பாதையில் இயக்கம்:குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 16128) அக். 25, 27, 29 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.