பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில் திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் நிலையில் அக். 28-ஆம் தேதி இந்த ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்படும். திருப்பதி- விழுப்புரம் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.மேலும், அதே நாளில், புதுச்சேரி- சென்னை எழும்பூா் மெமு பயணிகள் ரயில் புதுச்சேரியில் பிற்பகல் 3.35-க்குப் புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து அன்று மாலை 4.49 மணிக்கு சென்னை எழும்பூருக்குப் புறப்படும். இதனால் இந்த ரயில் அன்று புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.