அம்மான், அக். 23: ஜோா்டான் நாட்டில் இறுதிச் சடங்கின்போது தேவாலயத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; மேலும் 28 போ் காயமடைந்தனா்.தலைநகா் அம்மானில் இருந்து தெற்கே சுமாா் 180 கி.மீ. தொலைவில் சிறுபான்மை கிறிஸ்தவா்கள் வசிக்கும்கராக் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.நூற்றுக்கணக்கானோா் திரண்டிருந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், ஆயுதங்களுடன் நுழைந்த நபா்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதியப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.