தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 24)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.மேற்காசியாவில் நிலவும் பதற்றமான போர்ச் சூழல்களுக்கு மத்தியில், சென்ற வாரம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வந்தது.அதன்படி, நேற்று (அக். 23) சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.175 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,060-க்கும், சவரனுக்கு ரூ. 1,400 குறைந்து, ரூ. 1,04,480 -க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, 13,070-க்கும் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 1,04,560 -க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் ரூ. 220-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.20 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.The price of gold jewellery in Chennai has increased by Rs. 80 per sovereign.