ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு கியூபா மீதான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும் என்பதைக் குறிப்பிடும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு கியூபா மீது அமெரிக்க கடற்படை மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதுபற்றி, தனது ஆதரவாளர்களுடன் அவர் பேசுகையில், “எனக்குக் கொஞ்சம் இடைவேளைக் கொடுங்கள். ஈரானில் இருந்து திரும்பும் வழியில் கியூபாவை நாங்கள் பார்த்துக்கொள்வோம். அந்த அழகான கப்பல்கள் (அமெரிக்க கடற்படை) கியூபாவைக் கடந்து செல்லும். அவற்றில் ஒன்றை நாம் அவர்கள் கடற்கரை அருகில் நிறுத்துவோம். அவர்கள் தங்களின் கைகளை உயர்த்துவார்கள், அதன் பிறகு ஒப்பந்தத்தை முடித்துவைக்க நாம் மார்கோ ரூபியோவை (அமெரிக்க வெளியுறவு அமைச்சர்) அந்நாட்டுக்கு அனுப்புவோம்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், கியூபா மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது அந்நாட்டு அரசு உடன் உறவுகள் மேம்படுத்தப்படுமா? என்பது குறித்து அதிபர் டிரம்ப் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கெனவே, கம்யூனிஸ்ட் நாடான கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றது. கடந்த திங்களன்று (அக். 19) முன்னாள் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக ஃபுளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.ஜோா்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 6 போ் உயிரிழப்புUS President Donald Trump has indicated that pressure on Cuba may increase after military action against Iran.