மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகிறது.கோவையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக். 24) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து சீராகிய பின்னர் மீண்டும் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சனிக்கிழமையான இன்று வார இறுதி விடுமுறையைக் கொண்டாடக் கோவை குற்றாலத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள், வனத்துறையின் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!The Coimbatore Courtallam Falls have been temporarily closed due to heavy rains in the foothills of the Western Ghats.