அசாதாரணமானதை தனது வழக்கமாக மாற்றியவர் மெஸ்ஸி..! ஸ்பெயின் இளவரசி புகழாரம்!

Wait 5 sec.

ஸ்பெயினின் மிக உயரிய ‘பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ்’ விருதை லியோனல் மெஸ்ஸிக்கு அளித்த இளவரசி லியோனார் அவரது தனித்துவமான திறமை பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது. தனியொரு கால்பந்து வீரராக முதல்முறையாக இந்த விருதை வென்றவராக மெஸ்ஸி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2010 உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் கால்பந்து அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.ஸ்பெயின் 1981ஆம் ஆண்டு ‘பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ்’ விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பரிச்சுத் தொகை 50,000 யூரோஸ் (56,000 அமெரிக்க டாலர்கள்) ஆக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 52.97 லட்சம் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது கலை, அறிவியல், விளையாட்டு என பல துறைகளுக்கு வழங்கப்படுகிறது. 39 வயதான மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து இளவரசி லியோனார் (20 வயது) பேசியிருப்பதாவது: கால்பந்துப் போட்டியை அணுகுவதிலும் சில நொடிகளில் அதற்கேற்ப முடிவெடுப்பதும் மூலமாக அசாதாரணமானதை தனது வழக்கமாக மாற்றியவர் லியோனல் மெஸ்ஸி. மேலும் தனிப்பட்ட ஈகோவை விட எப்போதும் ஒட்டுமொத்த அணிக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதையும் மதிக்கிறோம் எனக் கூறினார். தேர்வுக்குழுவினர் மெஸ்ஸியைத் தேர்வு செய்வதற்கான காரணத்தை சொல்லும்போது அரங்கமே ஆர்பரித்தது. அதில், “கால்பந்து வரலாற்றிலேயே மிகவும் சிறந்த வீரர். அவரது அளப்பரிய திறமை, அற்புதமான கால்பந்து பயணம், அவரது கல்வி, உடல்நலம் மற்றும் தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகள், அணிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அவரைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்தது” எனக் கூறப்பட்டுள்ளது. மெஸ்ஸி இதுவரை 1181 போட்டிகளில் 936 கோல்கள், 427 அசிஸ்ட்டுகள் (கோல் அடிக்க உதவுதல்) செய்து அசத்தியுள்ளார். உலகிலேயே அவர்தான் அசிஸ்ட்டில் முதலிடம் வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.பிரின்ஸஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருதை வென்ற முதல் கால்பந்து வீரராக மெஸ்ஸி உலக சாதனை! Princess Leonor speka about Messi's unique career Princess of Asturias Awards