யுவன் இசையில் ஜோஜு ஜார்ஜின் பரிபாடி..! முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல்!

Wait 5 sec.

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துவரும் பரிபாடி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடலும் வெளியாகியுள்ளது. நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்த திரைப்படமான பணி பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் ரூ. 15 கோடியில் உருவாகி, ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவதாக பரிபாடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக்காட்சிகளில் இப்படம் தயாராகி வருகிறது.இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் முதல் பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஜோஜு ஜார்ஜின் சொந்த ஊரான திரிசூரைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலக்குடி எனும் ஊரைப் பற்றியதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை வேணு குன்னப்பிள்ளை சார்பாக காவ்யா ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இந்தப் படம் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் நிலையில் இருக்கிறது.40 ஆண்டுகளில் முதல்முறை... ரசிகர்களுடன் இணைந்து ஜெயிலர் 2 படம் பார்த்த ரஜினி!Paripadi: First look and Yuvan Shankar Raja song from Joju George film out