காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, எக்ஸ் எனப்படும் சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணக்கைத் தொடங்கி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.சோனியா காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தைத் தொடங்கி, அதில், ராஜீவ் காந்தியை கேம்பிரிட்ஜில் உள்ள க்ரீக் உணவகத்தில் முதல்முறையாக தான் சந்தித்தது பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.கேம்ப்ரிட்ஜில் உள்ள ஒரு சிறிய க்ரீக் உணவகத்தில்தான் என்னுடைய காதல் பயணம் தொடங்கியது. காதல், மகிழ்ச்சி மற்றும் நினைவுகளைக் கொண்ட ஒரு உலகத்தை ராஜீவும் நானும் உருவாக்கினோம், அது உலகத்தை, நவம்பர் 10ஆம் தேதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவிட்டு விடியோவை இணைத்துள்ளார்.In a small Greek restaurant in Cambridge my journey of love began. Rajiv and I created a world filled with love, laughter and memories. On 10th November, I share that world with you. https://t.co/zvN5Rqqstf— Sonia Gandhi (@SoniaGandhi) October 24, 2026சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், சமூக வலைத்தளப் பக்கங்களில் கணக்குகளைத் தொடங்கி அது பற்றிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டாமல் இருந்த நிலையில், இன்று எக்ஸ் பக்கத்தில் கணக்குத் தொடங்கியிருக்கிறார். அதுபோலவே, சோனியா காந்தி இதுவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்காமல் இருந்தாா். அவரின் விடியோ, அறிக்கை உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன.இந்த நிலையில், சோனியா காந்தி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தனது கணக்கை வியாழக்கிழமை தொடங்கினாா். அதில் முதல் பதிவாக தனது ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகம் குறித்த விடியோவைப் பகிா்ந்தாா். அந்த விடியோவில் புத்தகத்தின் முதல் பதிப்பை சோனியா காந்தி பெறும் காட்சியும், இனிப்புகளை மகள் பிரியங்கா காந்தியுடன் பகிரும் காட்சியும் இருந்தன. அந்தப் புத்தகத்தில் ஏராளமான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக சோனியா காந்தி பதிவிட்டிருந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியதும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர ஆரம்பித்தாா். இதைத் தொடா்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் உயா்நிலைத் தலைவா்கள் அனைவரும் சோனியா காந்தியின் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடர ஆரம்பித்தனா். இதேபோல் பல ஆயிரம் போ் அவரின் கணக்கை சில மணி நேரத்தில் தொடர ஆரம்பித்தனா்.சோனியா காந்தியின் புத்ககம் வரும் நவம்பா் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. Sonia Gandhi opens an account on X: Shares a love story as her first post!