பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார்.பிக் பாஸ் 10 நிகழ்ச்சி 6-ஆவது வாரத்தை நிறைவு செய்யவுள்ளது. பொதுவாக நிகழ்ச்சியின் கடைசி சில நாள்களில் மட்டும் கடினமான போட்டிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீசனில் நாள்தோறும் கடினமான போட்டிகள் கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், இந்த வாரத்தில் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருப்பதாக ப்ரோமோ விடியோ வெளியிட்டுள்ளனர்.கடந்த 2 வாரங்களாகவே விஜய் சேதுபதிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலேயே இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெயிலர் 2! சந்தானம் நடித்த காட்சிகள் நீக்கமா? வெளியான கொண்டாட்ட விடியோActress Ramya Krishnan replaces host Vijay Sethupathi on Bigg Boss 10 this week