வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடந்த பட்டாசு கிடங்கு தீ விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகினர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அப்புகல் சாலையில் ஹரி பிரசாத் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி (41), சங்கீதா ஆகிய இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்து பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அணைக்கட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கு குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தள முகவரியைப் பார்க்கவும். Two women killed in firecracker warehouse fireதொடர்ந்து குறையும் தங்கம் விலை: அக். 21 நிலவரம்!