சமூக ஊடகங்களில் பெண்களை தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்! கனிமொழி கண்டனம்

Wait 5 sec.

சட்டரீதியாகவும் காவல்துறையை வைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தொடர்ந்து தவெகவினர் வன்முறையை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "சமூக ஊடகங்களில் தவெகவினர், பெண்களை தொடர்ந்து அவதூறாகப் பேசுகிறார்கள். மேயர் பிரியா, திமுக மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள பெண்களைப் பற்றி மோசமான பதிவுகள் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வருக்கு எதிராக ஏதும் நடந்தால் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் அமைச்சர் பேசியது, ஒரு அமைச்சரின் போதைப்பொருள் விடியோ, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அவர்களை எல்லாம் கைது செய்ய தைரியம் இருக்கிறதா? நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைது என்பது பழிவாங்கும் நடவடிக்கை. நள்ளிரவில் அவருக்கு உடை மாற்றக்கூட அனுமதி கொடுக்காமல் அவரை கைது செய்திருக்கிறார்கள். இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதா?சட்டரீதியாகவும் காவல்துறையை வைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.Kanimozhi condemns those who continue to defame women on social mediaமுதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!