சம்பா சாகுபடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கக் கோரி, மன்னார்குடி, கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.தமிழகத்தின் டெல்டா மாவட்ட சம்பா விவசாய சாகுபடிக்கு நாள்தோறும் தினசரி 9 ஆயிரம் கனஅடி திறக்கக் கோரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(சிபிஐ, சிபிஎம்), அகில இந்திய விவசாயிகள் மகாசபை இணைந்து மன்னார்குடி, கோட்டூரில் உள்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் வைத்த கோரிக்கைகள்:* சம்பா சாகுபடியை பாதுகாக்க வெண்ணாறு காவிரியில் நாள்தோறும் 9,000 கன அடி வீதம் முறை வைத்து தண்ணீர் திறக்கவேண்டும்.* தவெகவின் தேர்தல் வாக்குறுதியின் படி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்.* எவ்வித நிபந்தனையுமின்றி புதிய பயிர் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும்.* டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் எல்-நினோ பாதிப்பை கருத்தில் கொண்டு டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.* வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.* தமிழகத்திற்கு உரிய காவிரி பங்கீட்டு நீரை திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமணியாற்று பகுதியில் மீண்டும் இறவை பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.மன்னார்குடி கீழப்பாலம் நான்குசாலை சந்திப்பில் நாகை எம்.பி வை.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தவிச மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, சிபிஎம்எல் மாவட்டச் செயலர் செல்வராஜ், விவசாயகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சதாசிவம், ஜி.முத்துகிருஷ்ணன், மு.அ.பாலதண்டாயுதம், ம.இந்திரஜித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மன்னார்குடி கீழ பாலத்தில் நாகை எம்பி வை. செல்வராஜ் தலைமையில் விவசாயிகள் சாலை மறியல். மன்னார்குடிமன்னார்குடி காளவாய்கரையில் விவசாயிகள் சங்க நிர்வாகி மகேந்திரன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.கோட்டூர் பேருந்து நிறுத்ததில் நடைபெற்ற சாலை மறியலில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து,விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர்கள் பி.சௌந்தரராஜன்(சிபிஐ), பி.ஏங்கல்ஸ்(சிபிஎம்), தங்கவேல்(எம்எல்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மறியல் போராட்டத்தின் போது, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், எம்எல்ஏ மாரிமுத்துவின் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இக்கோரிக்கைகள் குறித்து வியாழக்கிழமை சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.கோட்டூர் ஒன்றியத்தில் திருப்பத்தூர், தட்டான்கோவில், ஆதிச்சப்புரம் வளைவு, களப்பால், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை, விக்கிரபாண்டியம், சேந்தங்குடி ஆகிய இடங்களிலும் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.Farmers block roads in Mannargudi and Kottur, demanding the release of 9,000 cubic feet of water for samba cultivationஅணைக்கட்டில் பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 2 பெண்கள் பலி