அடேங்கப்பா... ஜெயிலர் - 2 அதிகாரப்பூர்வ வசூல்!

Wait 5 sec.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் கடந்த அக். 15 ஆம் தேதி உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பண்டிகை நாள்களின் விடுமுறையும் இணைந்து கொண்டதால் தென்னிந்திய அளவில் டிக்கெட்கள் விற்பனையும் ஆமோகமாக நடைபெற்றது. பான் இந்திய ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் படத்தைப் பார்த்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்ததால் கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் முதல் வார முடிவில் உலக அளவில் ரூ. 549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, மிக விரைவாக இவ்வளவு கோடிகளை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். இதற்கு முன் 2.0, ஜெயிலர், கூலி திரைப்படங்கள் மூலம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நடிகர் ரஜினிகாந்த் நான்காவது முறையாக மீண்டும் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டைகூட கசங்காமல்... ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்!The box office collection of the film Jailer - 2, starring actor Rajinikanth, has been announced.