அக். 23-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு? இந்த 3 மாவட்டங்கள் உஷார்!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் நாளை (அக். 23) நீலகிரி உள்பட மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் அக். 15ல் தொடங்கியுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை முதல் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகின்றது. முன்னதாக நேற்று (அக். 21) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை 8.30 மணிக்கு குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு உருவாக உள்ள நிலையில், நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை எங்கெல்லாம் மிக கனமழை, கனமழை பெய்யும் என்ற தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.நாளை கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.