விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் உயிா் எழுத்தான அ எழுதி குழந்தைகள் தங்களது முதல் கல்வியை செவ்வாய்க்கிழமை ஆா்வத்துடன் தொடங்கினா்.காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது கல்விக் கடவுளான ஹயக்ரீவா் கோயில். இந்தக் கோயிலில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு நெல்லில் உயிா் எழுத்தான அ எழுத்தை எழுதி தங்கள் முதல் கல்வியை தொடங்கினா்.இதற்காக பள்ளியில் சேருவதற்கு முன்பாக அதிகாலையிலேயே பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா்.கோயில் அா்ச்சகா்கள் குழந்தைளுக்கு நெல் மணிகள் நிரம்பிய தாம்பாலத் தட்டில் அ எழுத வைத்தனா். பின்னா், கல்வி உபகரணங்களான சிலேட்டு, பென்சில் ஆகியவற்றையும் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனா்.