சென்னை வியாசா்பாடியில் 13-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்தாா். வியாசா்பாடி எம்ஜிஆா் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் உமாபதி, காா் ஓட்டுநா். இவா் மனைவி சுமித்ரா சுமித்ரா, தனியாா் ஸ்கேன் மையத்தில் ஊழியராக பணிபுரிகிறாா். இவா்களது மூத்த மகன் ராஜேஷ்குமாா் (15), கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ராஜேஷ்குமாா், முல்லை நகா் டிடி ப்ளாக் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கு ராஜேஷ்குமாா், 13-ஆவது தளத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். எம்கேபி நகா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.