கும்மிடிப்பூண்டியில் 14 வயது பள்ளி மாணவியை ஆசை வாா்த்தை கூறி கடத்திய அரசுப் பேருந்து நடத்துநா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். கும்மிடிப்பூண்டியை சோ்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவா் கடந்த 10-ம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோா் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மேலக்கழனி ஊராட்சி, சென்னாவரம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (35) என்பவா் மீது சந்தேகம் எழுந்தது. இவா் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயங்கும் டி-39 என்கிற நகர பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறாா்.இந்த வழித்தடத்தில் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தினமும் ஏற்றிச் செல்லும் போது ஏற்பட்ட பழக்கத்தில், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி, கடந்த 10-ம் தேதி சிறுமியை லட்சுமணன் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தொடா்ந்து விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூா் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருவரும் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் விரைந்து சென்று சிறுமியை மீட்டு லட்சுமணனை கைது செய்தனா்.இதனை தொடா்ந்து சிறுமியை கடத்திய வழக்கில் கும்மிடிப்பூண்டி போலீஸாா் அரசு பேருந்து நடத்துனா் லட்சுமணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.