கோவை: கோவையில் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வெட்டால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கணபதி, சங்கனூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, துடியலூர், இடையர்பாளையம், கணுவாய் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மாநகரின் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.குறிப்பாக, கவுண்டம்பாளையம் –நல்லம்பாளையம் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் ஓடுவதால் இருசக்கர வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றவும், மின்வெட்டுப் பாதிப்புகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.Heavy rain continues in Coimbatore for more than 2 hours: Public suffers from power cutsமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு: 108 வீணைகள் இசைத்து வழிபாடு!