பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ-க்கு வாழ்த்துத் தெரிவித்து முதல்வர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்எச்6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ-க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். வீராங்கனை நித்ய ஶ்ரீ சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, தடைகளைத் தகர்த்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது. வீராங்கனை நித்ய ஶ்ரீ, வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களைத் எட்ட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். Rs.30 lakh incentive for Paralympic Badminton Bronze medalist NIthya Sriமனிஷா ராமதாஸ் வெற்றி இளம்தலைமுறை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய நம்பிக்கை: முதல்வர் விஜய்