நடிகர் தனுஷின் ஓம் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ரங்கூன், அமரன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராஜ்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கியவர். தற்போது, தனுஷின் வொன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஓம் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் நடிகர் மம்மூட்டி முதல்முறையாக தனுஷுடன் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. Pirandhanaal nalvaazhthukkal @Rajkumar_KP ❤️Wishing our #OM director a wonderful birthday. Can't wait to show you all the world he has created, this November 20 @dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr— Wunderbar Films (@wunderbarfilms) October 22, 2026 இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சிறப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் ராஜ்குமாருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனை ரூ. 500 கோடி..? சிம்ம சொப்பனமாகத் திகழும் சூப்பர் ஸ்டார்!A special video has been released on the birthday of actor Dhanush's Om film director Rajkumar Periyasamy.