சீன் ஒன்லைன் கதை இதுதான்: ஜித்து மாதவன்

Wait 5 sec.

இயக்குநர் ஜித்து மாதவன் சீன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில், சீன் திரைப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியுள்ளார். இதில், “ஒரு வழக்கை விசாரித்து அதிலிருந்து விலகிய காவல்துறை அதிகாரி மீண்டும் அதே வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார். நாயகனான அந்த அதிகாரி விசாரணைக்காக புதிதாகத் தன் குழுவை உருவாக்குகிறார். இந்தக் குழுவை அவர் எப்படியெல்லம் கையாள்கிறார். இவர்களைச் சமாளிக்க முடியாமல் எப்படி திணறுகிறார் என்பதுடன் சந்தர்ப்ப சூழ்நிலை மாறும்போது அந்த வழக்கால் என்னென்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் குழப்பங்களின் அடிப்படையில் சீன் கதையை உருவாக்கியுள்ளோம். ரோமஞ்சம், ஆவேஷம் திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். என் மூன்றாவது திரைப்படமான சீன் தமிழிலேயே உருவாகியிருக்கிறது. நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யா ஜாலியான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடனும் நடிகை நஸ்ரியாவிடமும் பணியாற்றியது என் நண்பர்களுடன் பணியாற்றியது போல் மகிழ்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரு மண்ணு எடுத்து... பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!Director Jithu Madhavan has spoken about the movie Scene.