இந்தியாவுக்கு 15ஆவது தங்கம்..! வீராங்கனை சுவர்ணா ராஜ் அசத்தல்!

Wait 5 sec.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சுவர்ணா ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 15ஆவது தங்கம் கிடைத்துள்ளது. ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.மகளிருக்கான எஃப்54 வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சுவர்ணா ராஜ் தனது ஐந்தாவது முயற்சியில் அதிகபட்ச தூரமான 15.66 மீட்டருக்கு வட்டு எறிந்து தங்கம் வென்றார். தனது முதல் நான்கு முயற்சிகளிலும் 15 மீட்டருக்கு அதிகமாக வட்டு எறிந்த சுவர்ணா ராஜ் ஐந்தாவது முயற்சியில் தனது அதிகபட்ச தூரத்தை அடைந்தார். ஈரானின் ஷாஹ்லா ஹதிதி 15.45 மீட்டருக்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கமும் வியத்நாமின் தி கோச் து கோயேன் 14.65 மீட்டருக்கு எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றார்கள்.இந்தியா நேற்றுடன் 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் வென்றிருந்தார்கள். தற்போது. இந்தியாவுக்கு 15ஆவது தங்கம் கிடைத்துள்ளது. F54 வகை வீரர்களுக்குக் கைகளில் மேல் தசையில் முழுமையான வலிமையும், உடலில் பகுதியளவு முதல் முழுமையான தசை வலிமையும் இருக்கும். ஆனால், நடு உடற்பகுதி மற்றும் கால்களின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Another Gold for India!Suvarna Raj strikes Gold in the Women’s Discus Throw F54, bringing glory to the nation at the #APG2026.#Cheer4Bharat pic.twitter.com/Oh0hufJufI— Doordarshan Sports (@ddsportschannel) October 22, 2026இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 தங்கம் உள்பட 27 பதக்கங்கள் India's Suvarna Raj wins gold medal in women's discus throw F54 event at Asian Para Games.