பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப்பை சுடுவதற்கு ஆயுதங்கள் விநியோகித்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேர் (2 பேர் பெண்கள்) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ராதா என்ற 23 வயது இளம்பெண் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு ஆயுதங்கள் விநியோகித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ராதாவுக்கு குழந்தையும் உள்ளது. ராதாவின் கைது குறித்து முன்னாள் கணவரும் தாயாரும் செய்தியாளர்களுடன் பேசியுள்ளனர்.ராதாவின் முன்னாள் கணவர் சுனில் பேசியதாவது:''ராதா என் மனைவிதான். ஆனால் அது முன்பு. இப்போது இல்லை. அவருடன் இப்போது எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அவருடான தொடர்பு முறிந்துபோனது. அவள் என்ன செய்கிறாள் என்றோ எங்கு வசிக்கிறாள் என்றோ எனக்குத் தெரியாது. அவள் என் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவளுடன் எந்தவித தொடர்பும் இல்லை. 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு இரவில் அவள் என் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாள். அதன் பிறகு திரும்பவே இல்லை. நானும் அவளைத் தேட முயற்சிக்கவில்லை. காவல் நிலையத்தில் மட்டும் புகார் அளித்திருந்தேன். நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் அவளை நான் சந்திக்கவில்லை. 3 ஆண்டுகள் கழித்து நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். அவளிடமிருந்து எந்தவொரு இடையூறும் எனக்கு ஏற்படவில்லை. அவள் இங்கு இருக்கும் வரையிலும் எங்களுக்குள் எந்தவித முரண்களும் இல்லை. அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்றே என்னால் சிந்திக்க முடியவில்லை'' எனப் பேசினார். ராதாவின் தாயார் பேசியதாவது:''அவள் ஹரியாணாவில் வசித்து வந்தாள். ஒரு ஆலையில் வேலை செய்துகொண்டிருந்தாள். அவளை யாராவது வற்புறுத்தியிருக்கலாம்; ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றிருக்கலாம். என் மகள் இந்த பாதையை தேர்வு செய்திருக்கமாட்டாள். அவள் எனக்கு ஒரே மகள். அவளுக்கு திருமணம் செய்து வைத்தேன். அவள் இப்போது பிரிந்து வாழ்கிறாள். ஹரியாணாவிலேயே வேறு பகுதியில் தனியாக வசித்துவந்தாள். அவளை விடுதலை செய்யுங்கள். அவள் என் அப்பாவி மகள்'' என உருக்கத்துடன் பேசினார். பாலிவுட் டைகர் ஷ்ராஃப் அக். 18 ஆம் தேதி இரவு மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் டைகர் ஷ்ராஃப் காயங்களுடன் உயிர்த் தப்பிய நிலையில் அவரின் கார் ஓட்டுநர் மீது தோட்டா பாய்ந்தது. மேலும், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தேடிப் பிடித்து கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இன்று (அக். 21) மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!Young woman who supplied weapons to shoot Tiger Shroff Husband, prepare for torment