நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை (அக். 21) நன்றி தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வரும் கார்த்திகா, அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தமிழக காவல் துறையினரால் புதன்கிழமை (அக். 21) கைது செய்யப்பட்டனர்.கார்த்திகாவை கைது செய்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களான மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, எடப்படி பழனிசாமி, அன்புமணி, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பிரேமலதா, டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை போன்றவர்கள் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.இந்த நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய அனைவருக்கும் நன்றி என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இந்தக் கைது நடவடிக்கைக்க்கு எதிராகக் குரல் கொடுத்த அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு சீமான் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய,திமுகவின் தலைவரும்,… pic.twitter.com/DqAcPI7a0p— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 21, 2026தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!Party coordinator Seeman on Wednesday (Oct. 21) thanked opposition leaders who condemned the arrest of NA candidate Karthika.