புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் சில்லறை விற்பனை மூலம் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தது.பண்டிகைக் காலத்தில், மாருதி சுசுகி இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்யும் என அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் நவராத்திரி காலத்தில் பயணிகள் வாகனப் பதிவு, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அது 21.9 சதவீதம் சரிந்து 1.83 லட்சம் வாகனங்களாக இருப்பதாக இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தற்காலிகத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், நவராத்திரி காலத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை, இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை போலவே இருந்ததாக பானர்ஜி தெரிவித்தார்.பொதுவாக, ஓணம் காலம் தொடங்கி தீபாவளி வரையான காலம், பண்டிகைக் காலமாக கருதப்படுகிறது. இதில் விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா ஆகிய பண்டிகையும் அடங்கும்.கடந்த ஆண்டு, ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நுகர்வோர் வாகனங்களை வாங்குவதைத் தவிர்த்ததால், ஓணம் முதல் நவராத்திரியின் முதல் நாள் வரையிலான வாகன விற்பனை மந்தமாக இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு நவராத்திரியின் முதல் நாளன்று ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்ததால், நவராத்திரியின் முதல் நாளிலிருந்து தீபாவளி வரையிலான காலகட்டத்தில் விற்பனையில் ஏற்றம் கண்டது.சிறிய கார்களைப் பொறுத்தவரை, விநாயகர் சதுர்த்தியிலிருந்து தசரா வரையிலான வளர்ச்சி 16-17% அளவில் உள்ளது. இதற்கிடையில் விக்டோரிஸ் மற்றும் பிரெஸ்ஸா வாகனங்களின் விநியோகத்தை எங்களால் அதிகரிக்க முடிந்ததால், எஸ்யூவி விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. அக்டோபர் மாதம் சுமார் 2 லட்சம் வாகனங்கள் முன்பதிவு நிலுவையில் இருந்த நிலையில் தசராவுக்குப் பிறகு இது 2.7 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது.வலுவான சந்தைத் தேவை தொடர்ந்து நீடிக்கும் என்ற நம்பிக்கையில், தீபாவளி வரையிலான ஒட்டுமொத்தப் பண்டிகைக் காலத்தில் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கிறோம்.Maruti Suzuki India Ltd, expects double-digit growth in retail sales for the festival season from Onam to Diwali this year.விஷால் மெகா மார்ட் Q2 லாபம் 3.65% அதிகரிப்பு!