செஞ்சி அருகே கடந்த 12 ஆம் தேதி 7 வயது சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 10 நாள்களாக காவல் துறையினர் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகளான 7 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கியபோது மாயமானாா். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏ.டி.எஸ்.பி. தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள், ஒரு பயிற்சி டி.எஸ்.பி., 3 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படைகள், இதைத் தவிர, காவல் துறையின் சிறப்புக் குற்றப் பிரிவினா் அடங்கிய தனிப்படையினா் ஆகியோா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.போக்சோ குற்றவாளிகள் உள்பட 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், 10 நாள்களாகியும் சிறுமியைக் கண்டறிவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே சிறுமி மாயமான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!Missing girl case near Gingee Transfer to CBCID