சீர்காழியில் இட்லி கடைகாரரிடம் உலோக சிலைகள், துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் கணவர், மனைவி உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் சனிக்கிழமை மாலை, காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றிய போலீஸார், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சீர்காழி அரியா பிள்ளை குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (47), அவரது மனைவி ரோஸ்லின் (41), மற்றும் விளந்திடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி (25) என்பதும், சுரேஷும் அவரது மனைவியும் இணைந்து அரியா பிள்ளை குளக்கரையில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாமி உலோகச் சிலைகள், குளோரோபார்ம், துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களைப் போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மூவரையும் கைது செய்து, சிலைகளும் துப்பாக்கியும் எங்கிருந்து வந்தன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா, கைது செய்யப்பட்ட மூவரிடமும் நேரில் விசாரணை நடத்தினார். இட்லி கடைக்காரர் வீட்டில் அதிநவீன துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சீர்காழிப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Police in Sirkazhi seized metal idols and a gun from an idli vendor and arrested three people, including a husband and wife.ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது