சூரத் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு: 3 பேர் கைது

Wait 5 sec.

சூரத் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசி அதன் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம், சூரத் அருகே அக்டோபர் 18ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் உதய்பூர் சிட்டி - சூரத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது உத்ரன் மற்றும் சூரத் இடையே அந்த ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி-6 மற்றும் பேன்ட்ரி கார் பெட்டிகளின் இரண்டு ஜன்னல்களின் மூன்று கண்ணாடிகள் சேதமடைந்தன.இருப்பினும், இதில் பயணிகள் அல்லது பணியாளர்கள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை மாலை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிகாரைச் சேர்ந்த கோலு குமார் சௌத்ரி (22), சந்தேஷ் குமார் (18) மற்றும் மந்தோஷ் முகியா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.விளையாட்டாகவே ரயிலின் மீது கற்களை வீசியதாக மூவரும் தெரிவித்ததாக ரயில்வே காவல் ஆய்வாளர் தினேஷ் யாதவ் தெரிவித்தார். கைதானவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 153-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக ரயில் தண்டவாளத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். Three labourers from Bihar have been arrested for allegedly throwing stones at the Vande Bharat Express near Surat "for fun" and damaging windows, police said on Saturday. சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி