ஆசிய பாரா விளையாட்டில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இரண்டாவது முறையாக வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.கலப்பு இரட்டையர் எஸ்எல்3- எஸ்யு5 பாட்மின்டன் பிரிவில் இந்திய வீரர் நிதீஷ் குமார் - தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இணைந்து இறுதிப் போட்டியில் பாராலிம்பிக் சாம்பியனியம் 21-11, 19-21, 14-21 என்ற கேம்களில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இது அவருக்கு இரண்டாவது வெள்ளி என்பதும் கவனிக்கத்தக்கது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிதீஷ் குமார் தங்கம் வென்றிருந்த நிலையில், இது அவருக்கும் இரண்டாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்தியாவுக்கு 27 தங்கம், 34 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக 104 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் நீடிக்கிறது. SILVER FOR India! Nitesh Kumar & Thulasimathi Murugesan clinch Silver in Para Badminton Mixed Doubles SL3-SU5 at #APG2026, adding another medal to India’s tally.#Cheer4Bharat pic.twitter.com/BvM2tatAZw— Doordarshan Sports (@ddsportschannel) October 23, 2026துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையுடன் இரட்டைத் தங்கம் வென்ற மோனா அகர்வால்!Nitesh Kumar & Thulasimathi Murugesan clinch Silver in Para Badminton Mixed Doubles