அரசு பேருந்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகள் கடத்தி வந்த சகோதரிகள் 3 பேர் கைது

Wait 5 sec.

சீர்காழிக்கு அரசு பேருந்தில் புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை கட்டைப்பையில் வைத்து கடத்தி வந்த சகோதரிகள் 3 பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்காலில் இருந்து மதுபானங்கள் சீர்காழி பகுதிக்கு பேருந்தில் கடத்தி வருவதாக சீர்காழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாகையில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்தில் வந்து சீர்காழி பேருந்து நிலையத்தில் கட்டைப்பையுடன் மூன்று பெண்கள் இறங்கினர். அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களது கட்டைப்பையை சோதனை மேற்கொண்டதில், அதில் 400 மதுப்புட்டிகளை விற்பனைக்காக சீர்காழிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தி வந்த கவிதா மற்றும் அவரது சகோதரிகள் சுகன்யா, வேம்பு ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.3 sisters arrested for smuggling liquor bottles from Puducherry state in a government busகனமழை எச்சரிக்கை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை