எல். முருகன் ராஜிநாமா: மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

Wait 5 sec.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதவி விலகியதையடுத்து மாநிலங்களவை இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு நவ. 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற அக். 26-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியாகிறது.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 2வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை - நவம்பர் 3வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் - நவம்பர் 5வாக்குப்பதிவு நடைபெறும் நாள் - நவம்பர் 12 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நவம்பர் 16-ம் தேதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன், மத்திய அமைச்சர் பதவி வகித்தார். அவர் தனது பதவியை கடந்த அக். 14-ம் தேதி ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எல். முருகனின் பதவிக்காலம் வரும் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. Ex Union ministerL. Murugan resignation: Rajya Sabha by-elections announced தங்கம் விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (அக். 22)