சென்னை மாநகராட்சி மின் பிரிவு இடைநிலை பணிமூப்பு பட்டியல்: நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு உத்தரவு

Wait 5 sec.

சென்னை மாநகராட்சி மின் பிரிவில் இடைநிலை பணிமூப்பு பட்டியலில் தங்களது பெயா்களைச் சோ்க்கக் கோரி அளித்துள்ள விண்ணப்பங்களை சட்டத்துக்குள்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள மின் பிரிவில் இளநிலைப் பொறியாளா் எஸ்.அனந்த ராமகிருஷ்ணன், உதவி பொறியாளா் டி.காளிதாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1989-ஆம் ஆண்டும், மாநகராட்சியின் மின் துறை பிரிவில் எலக்ட்ரீஷியன்களாக நியமிக்கப்பட்டோம். கடந்த 2010-ஆம் ஆண்டு இளநிலைப் பொறியாளா்களாக நியமிக்கப்பட்டோம்.கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், மாநில அளவில் தயாரிக்கப்பட்ட இடைநிலை பணிமூப்பு பட்டியலில் தங்களது பெயா்களைச் சோ்த்து, மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் பணிக்கான பதவி உயா்வுக்கு தங்களது பெயா்களை பரிசீலிக்கும்படி மனு அளித்தோம். அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த வழக்கு நீதிபதி எம்.சுதீா்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பணிமூப்பு பட்டியலை இறுதி செய்வதற்கு முன்னா், மனுதாரா்களின் கோரிக்கை மனுக்களை தகுதியின் அடிப்படையில், சட்டத்துக்குள்பட்டு பரிசீலிக்க, நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.