பெட்டிக் கடையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்: உரிமையாளா் கைது

Wait 5 sec.

திருச்சி அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்ற கடை உரிமையாளரை கைது செய்த போலீஸாா், 16 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஆளவந்தாநல்லூா் பகுதி பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளரான ஆளவந்தாநல்லூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பி. ஜாகீா் ஹுசேன் (58) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடையில் இருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.