கனமழை: திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.23) விடுமுறை

Wait 5 sec.

திருவண்ணாமலையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. மேலும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரையில் பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.இந்த நிலையில், திருவண்ணாமலையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக். 23) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால், இந்த 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கனமழை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று (அக். 23) விடுமுறைHeavy rain: Holiday for schools and colleges in Tiruvannamalai today (Oct. 23)