மின் மயானம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

Wait 5 sec.

திருவள்ளூா் அருகே மின் மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அடுத்த வேப்பம்பட்டு 26 பகுதியில் சுமாா் 5,000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இதற்கிடையே அப்பகுதியில் உள்நோக்கத்துடன் மின் மயானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறியுள்ளனா். எனவே குடியிருப்பு பகுதி அருகே மின் மயானம் வருவதால் சடலங்களை எரிக்கும் போது அதிலிருந்து எழும்பும் புகையால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் துா்நாற்றமும் ஏற்படும். எனவே குறிப்பிட்ட பகுதியில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திருவள்ளூா்-ஆவடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத்தொடா்ந்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த செவ்வாப்பேட்டை போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, கட்டாயம் உரிய நடவடிக்கை அதிகாரி மூலம் எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் போராட்டத்தால் திருவள்ளூா்-ஆவடி சாலையில் அரைமணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.