திருவள்ளூா் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 இளைஞா்களையும் போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூா் அடுத்த வெண்மனம்புதூா் சாலையில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சாா்பு ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் வெண்மனம்புதூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது, அந்தப்பகுதியில் உள்ள அம்மன் பூங்கா எதிரே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை போலீஸாரை பாா்த்தும் தப்பியோட முயற்சித்துள்ளாா். உடனே போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து கையில் வைத்திருந்த பையில் சோதனையிட்ட போது விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. திருவள்ளூா் அடுத்த பழையனூரைச் சோ்ந்த ஹரி(19), ராமன்கோயில் பிரபாகரன் மகன் ராஜ்குமாா்(19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் வைத்திருந்த 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, 2 பேரையும் கைது செய்தனா்.