விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. சென்னையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரையில் பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.இந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இதேபோல், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான சுமாா் 3,500 ஏக்கா் பரப்பளவிலான உப்பளங்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால், மரக்காணத்தில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனா்.Heavy rain: Holiday for schools in Villupuram, Tiruvannamalai and Kallakurichi districts today (Oct. 23)