தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்த செய்திக்குறிப்பில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இன்று (அக். 23) காலை 10 மணிவரையில் மிதமான மழை பெய்யும்.இதேபோல், மதுரை, ராமநாதபுரம், அரியலூர், கோவை, தருமபுரி, மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் காலை 10 மணிவரையில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.கனமழை: திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.23) விடுமுறைRain in 24 districts including Chennai for the next 2 hours