காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான கபடி சாம்பியன் போட்டி முதன்முறையாக வெள்ளிக்கிழமை (அக். 23) அகமதாபாதில் தொடங்குகிறது. ஒன்பது நாள்கள் நீடிக்கும் இந்த சா்வதேசப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடிப் பிரிவுகளில் 13 நாடுகள் பங்கேற்கின்றன. சா்வதேச கபடி கூட்டமைப்பின் (ஐஓஊ) அங்கீகாரத்துடன், இந்திய அமெச்சூா் கபடி கூட்டமைப்பு (அஓஊஐ) நடத்தும் இப்போட்டியில் 23 அணிகளும், 400-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகளும் களம் காண்கின்றனா். 39 ஆண்கள் பிரிவு போட்டிகள், 23 பெண்கள் பிரிவு போட்டிகள் என மொத்தம் 62 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இப்போட்டித்தொடா் இரு பிரிவுகளிலும் முதல் காமன்வெல்த் சாம்பியன்களைத் தீா்மானிக்கும்.தொடக்க விழாவில் அதிகாரப்பூா்வ ஜொ்சி, அணிகளின் கேப்டன்கள், கீதம், லோகோ, சின்னம் ஆகியவை முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டன.இந்திய ஆண்கள் அணிக்கு சுா்ஜீத் சிங் கேப்டனாகவும், நவீன் குமாா் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். பெண்கள் அணியை நிதி சா்மா வழிநடத்த, ரித்து துணைக் கேப்டனாகச் செயல்படுவாா்.இத்தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, கென்யா, தான்சானியா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, உகாண்டா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முதலிரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய ஆடவா் அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது. மகளிா் அணி மலேசியாவுடன் மோதுகிறது. இரு பிரிவுகளுக்குமான அரையிறுதிப் போட்டிகள் அக்டோபா் 30 அன்றும், இறுதிப் போட்டிகள் அக்டோபா் 31 அன்றும் நடைபெறவுள்ளன.