திருத்தணி அருகே அறையில் சிக்கித் தவித்த இரண்டரை வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா். திருத்தணி அடுத்த வேலஞ்சேரியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரின் இரண்டரை வயது மகன் கிறிஸ்விக், வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அறையின் உள்தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு சிக்கிக் கொண்டாா். இதனால் பதற்றமடைந்த பெற்றோா், உடனடியாக திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் சம்பத் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சுமாா் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டனா்.பின்னா் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டதால் பெற்றோா் நிம்மதியடைந்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.