போராட்டங்கள் பயனற்றவை.. பஞ்சாபில் என்டிஏ ஆட்சி அமைக்கும்! அமித் ஷா

Wait 5 sec.

காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சாடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்டி ஷா, போராட்டங்களால் எந்தப் பயனும் இல்லை, பஞ்சாபில் அடுத்த அரசாங்கத்தை என்டிஏ அமைக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.தில்லியில் யமுனை நதியைச் சுத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு ரூ. 8,941 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் அமித் ஷா. அப்போது அவர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு, வாக்குத் திருட்டு நடந்ததாக ஆளும் அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் பல பத்தாண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இல்லை என்பதை நினைவுப்படுத்துகிறேன். தில்லியில் முந்தைய காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் கழிவுநீர் ஆற்றில் கலக்க அனுமதித்ததாகவும், தற்போது பாஜக அரசு அந்தக்கழிவு நீரைக் குறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலைத் தாக்கிப் பேசிய ஷா, வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சாக்குப்போக்கு அரசியல் ஆம் ஆத்மியைக் காப்பாற்றாது என்றார்.பஞ்சாப் மக்கள் ஒரு என்டிஏ அரசை விரும்புகிறார்கள், தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடையும். யமுனையைச் சீரமைத்தப் பிறகு 2029-ல் மக்கள் ஆதரவை பாஜக கோரும். பஞ்சாபில் என்டிஏ அரசு அமைந்த பிறகு, தற்போது நிலவும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.ராய்ப்பூரில் குடியரசுத் தலைவர் முர்மு! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு!