நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 65 முதுநிலை தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலைவாய்ப்பு விளம்பர எண். F.6/11/SPA/2026-SC (RC)பணி: முதுநிலை தனி உதவியாளர்(Senior Personal Assistant) காலியிடங்கள்: 65சம்பளம்: மாதம் ரூ.47,600 -1,51,100தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்ற தெரிந்திருப்பதுடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 110 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 10.11.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர்.எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை பெருநகரங்களில் நடைபெறும்.விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரு.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500. கட்டணத்தை யுகோ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: https://www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.11.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Online applications are invited from Indian citizens, who fulfill the following qualifications and other eligibility conditions, as on Ist October, 2026, for selection of suitable candidatesஉச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?