ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பு..! தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா!

Wait 5 sec.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாம் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீசியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து, ஃபாலோ ஆன் ஆனதால் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. பேட்டி செய்து வருகிறது. தற்போது, ஆஸி. அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஸ்காட் போலண்ட் 32 ரன்கள் (129 பந்துகளில்), அலெக்ஸ் கேரி 1 (2 பந்துகளில்) விளையாடி வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்த்த ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 4 விக்கெட்டுகளே தேவையாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இன்றைய நாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்தால் மட்டுமே இந்தப் போட்டியை சமனில் முடிக்க முடியும். இல்லையெனில் தொடர் 1-1 என மாறும் வாய்ப்பிருக்கிறது. Steve Smith out..! Australia on the verge of defeat!