போக்ஸோ வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் சில நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பொந்துகம்பட்டியைச் சோ்ந்த ஜெயமணி மகன் மணி(28), கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகசுந்தரம்(23) ஆகியோா் அம்மாணவியை ஏமாற்றி மதுரைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.