விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வடக்கிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா், வானூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.